Dr APJ Abdul Kalam: ஆன்மிக பூமியில் முளைவிட்ட அறிவியல் பயிர்.. அப்துல் கலாம்!
- எம்.கே. திருப்பதி
ஆன்மிக பூமியில்
முளைவிட்ட
அறிவியல் பயிர்!
தென்கோடியில் பிறந்து
விண்வெளியை அளந்து பார்த்த
அறிவியல் பிரம்மா!
கார்ப்பரேட் கரப்பான் பூச்சிகளை
பொக்ரான் பாலைவனத்தில்
புதைத்த புத்திசாலி!
அணுகுண்டின்
அவசியம் உணர்த்திய
அறிவியலாளி!
'பலத்துக்கு பலமே
பலம் ' என முழங்கிய
சமகால சத்திரியன்!
எறியும் ஏவுகணையில்
நம் சக்தி
அறியும் அகிலமென
தாக்கீது விட்டவர்!
ஆசிரியப் பணி
அறிவுப் பணி
ஆகாயப் பணி...
அனைத்துப் பணிகளின்
இலக்கணம் அறிந்தவர்!
காரிய சித்தி
காயப்படும் என்று
காரிகை புத்தியை
காலடியில் புதைத்தவர்!
இளைஞர் எழுச்சி
இந்திய எழுச்சியென
இளைஞர்களின்
இதயத்தில் விதைத்தவர்!
'code : decode :
Made...' என்ற
மந்திரச் சொற்களின்
மொத்தக் கலவை!
அணுஆய்வை
ஆடையாய் அணிந்தவருக்கு
அரசு - அதிகார ஆடையை
அணிவித்து
அழகு பார்த்தது!
மாணவர் மனம் புகுந்த
மகான்... இறுதிவரை
மாணவனாகவே -
மனனம் செய்தவர்!
அவர்
அறிவைப் போலவே
ஆற்றலைப் போலவே
அழகானது... அவரது
ஹேர் ஸ்டைல்!
அலைகிறது
அவர் நினைவுகள்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)