கல்லூரி நட்பு !!
- ச.அகல்யா
எங்கேயோ பிறந்து,
எங்கேயோ வளர்ந்து,
எங்கேயோ பள்ளி படிப்பை முடித்தோம்.
விருப்பம் இல்லாமலே கல்லூரியிலும் சேர்ந்தோம்
ஆனால் இங்குதான் கிடைத்தத அற்புதமான நட்பு
பிடிக்காத கல்லூரிக்கு வருவதையும் பிடிக்க வைத்தது நட்பு
இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின்
உங்கள் பெயரை அறிந்தாலும் கூட...
பின்பு யாரைக் கூப்பிட நினைத்தாலும்
முதலில் நாவில் புறப்படும் பெயர் உங்களுடையதாக மாறியது!!
14 வருட பள்ளி படிப்பில்
ஒரு முறை கூட தோழிகளுடன் இன்பப்பயணம் சென்றதில்லை
ஆனால் உங்களுக்கோ அப்படி இல்லை
எனக்கு இது உங்களோடு செய்த பயணம்...
இல்லை ...!
திருத்தம்...!
என் முதல் பயணம் ஆரம்பித்ததே உங்களோடுதான் .
சதம் தவறான புரிதல் நம்மிடையே ஏற்பட்டாலும் கூட
ஒரே ஒரு புன்னகை போதும் சதத்தை தசமாக மாற்ற..!
இந்த அழகான நட்பு கடைசி வரை தொடர ஆசை!
(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)