Ananthi Poem: கரும்பலகையின் கனவு
May 10, 2026,03:05 PM IST
- ச. ஆனந்தி
வகுப்பில் உள்ள அனைவரின் கைகள் என்மேல் பதிய வேண்டும்!
சுண்ணக்கட்டி என் கரு உடலை மறைக்க வேண்டும்!
வைக்கும் சிறுபுள்ளிகள் மிகப்பெரிய கோலங்களாக வேண்டும்!
நீட்டும் கோடுகள் பற்பல கோட்டைகளை கட்ட வேண்டும்!
கிறுக்கல்கள் பேர் சொல்லும் கவிதைகளாக வேண்டும்!
எழுதும் எழுத்துகள் வாழ்வை மேம்படுத்தவேண்டும்!
வெள்ளை வண்ணம் தூய்மையின் அடையாளம்!
அது என்னக்கென்றுமே நல்ல சகுனம்!
என் கனவும் நினைவாகுமோ?
என்றாவது பலிக்குமோ?
இப்படிக்கு
வகுப்பறை கரும்பலகை!
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், அ மே நி ப கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)