சாயந்திரம் ஆயிருச்சா.. வாங்க வாழைக்காய் கனவறுவல் செஞ்சு சாப்பிடலாம்!
- எஸ்.சுமதி
சாயந்திரம் ஆயிட்டாலே பலருக்கும் வாய் நமநமங்கும். ஏதாச்சும் சினாக்ஸ் சாப்பிட்டாதான் ஆச்சு. எப்பப் பார்த்தாலும் வடை, பஜ்ஜி, போண்டாவே சாப்பிட்டுப் போரடிச்சுப் போச்சு.. வேற ஏதாச்சும் சாப்பிடலாமேன்னு உங்களுக்குத் தோணுதுல்ல.. உங்க மைன்ட் வாய்ஸ்ஸை கரெக்ட்டா பிடிச்சுட்டோம்.. அதுக்காகத்தான் இப்போ சூப்பர் டிஷ்ஷுடன் வந்திருக்கும்.
அதுக்குப் பேருதான் வாழைக்காய் கனவறுவல்.. அது என்ன புதுசா இருக்கேன்னு யோசிக்காதீங்க.. சூப்பரான டிஷ்ஷுங்க.. வாங்க செஞ்சு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் 2
அரிசி மாவு 2 தேக்கரண்டி
கடலை மாவு 2 தேக்கரண்டி
சோள மாவு 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப
பெருங்காய பவுடர் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
வாழைக்காயை தோல் சீவி, வட்ட வட்டமாக சிறிது கனமாக அறிந்து கொள்ள வேண்டும். அதில் அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு , மிளகாய் தூள், உப்பு மற்றும் காயப் பவுடர் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும்.
வாணலியில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் பிசைந்து வைத்து உள்ள வாழைக்காயை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சுவையான வாழைக்காய் கன வறுவல் ரெடி.
ஜாலியா செஞ்சு சாப்பிட்டுட்டே டிவியில் ஏதாச்சும் காதலர் தின சிறப்பு புரோகிராமை பார்த்து ரசிங்க!
(ச. சுமதி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் , ஶ்ரீ KGS மேல்நிலைப் பள்ளி , ஆடுதுறை , தஞ்சை மாவட்டம்)