ஏசு பாலன் வருகிறார்!
Apr 05, 2026,05:06 PM IST
- சகாய தேவி
ஏசு பாலன் வருகிறார்
ஏக்கத்தோடு காத்திருப்போருக்காக
ஏக பிதா வருகிறார் ...
சிலுவையின் நாயகன் வருகிறார்
சாவை வென்றவர் வருகிறார்
சாதனை நாயகன் வருகிறார்
சாத்தானை வென்றவர் வருகிறார்
சர்வ வல்லமை கொண்டவர் வருகிறார்
யார் அவர் ....
யார் அவர் ...
எல்லோரையும் நேசிக்கும்
இயேசு தானே அவர் ...
சிலுவையில் அறையப்பட்டாரே
சிரசில் முள்முடி தாங்கினாரே
சிலுவையின் நாயகன் வருகிறார்
சிரம் தாழ்ந்து வணங்கிடுவோம்
சிந்தையில் அவர் குணம் கொண்டிடுவோம்
சாத்தானை வென்றவரை தினம் கொண்டாடிடுவோம்
இயேசு காட்டிய வழியில்
இறை அன்பின் பாதையில்
எல்லோரையும் நேசித்து
எல்லோரிடமும் அன்பு பாராட்டி
எல்லாம் வல்ல இறையை வேண்டி நிற்போமா
அவர் வழி அன்பின் வழி வாழ்வோமோ !
எனது எஸ்டர் வாழ்த்துக்கள்
(சகாய தேவி, கவிஞர் சகாய சாரல்கள் , சென்னை)