மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026
- ஸ்வர்ணலட்சுமி
மாங்கனி நகர் சேலம் மாநகர் பட்டத்து மகாராணி கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழா நாளை ஜூலை 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. தமிழ் மாதமான ஆடி மாதம் (ஜூலை- ஆகஸ்ட்) மாதத்தில் மிகச்சிறப்பாக திருவிழா சேலம் மாநகரில் களை கட்டுகிறது.
இம்மாபெரும் திருவிழாவில் பூச் சாட்டுதல்,கம்பம் நடுதல், தேர் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா ஆகியவை சுமார் 15 முதல் 22 நாட்கள வரை வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெறவிருக்கிறது.
ஆடித் திருவிழா :
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
விழா தொடக்கம்( பூ சாட்டுதல் ):
ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சாற்றுதலின் போது உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூக்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது சேலத்தில் உள்ள மற்ற அனைத்து மாரியம்மன் கோயில்களுக்கும் இந்தக் கோவிலில் இருந்து தான் பூ எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். பூக்கூடை ஊர்வலமாக வந்து பக்தர்கள் அம்மனுக்கு பூக்களைச் சாற்றி வழிபட தொடங்குவர்.இதுவே ஆடி திருவிழாவின் முதல் நிகழ்வாகும்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று தாங்கள் கொண்டு வந்த வண்ண மலர்களை அம்மனுக்கு படைத்து நோய் நொடிகளில் இருந்து விடுபடவும், மழை பெய்யவும் வேண்டி வழிபாடுகள் நடைபெறுகிறது.
கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவின்
நிகழ்ச்சி நிரல் :
21 07.2026 -ஆடி 5 - பூச்சாட்டல்.
22.07.2026 -ஆடி 6- கொடியேற்றம்.
28.07.2026 - ஆடி 12 - கம்பம் நடுதல்.
03.08.2026 -ஆடி 18 -சக்தி அழைத்தல்.
04.08.2026 -ஆடி 19 -சக்தி கரகம்.
05 & 06.08.2026,- ஆடி 20, 21 பொங்கல் வைத்தல் மற்றும் உருளு தண்டம்.
07.08.2026 - ஆடி 22- தேரோட்டம்.
08.08.2026 -ஆடி 23 - கம்பம் கங்கை சேருதல்.
09.08.2026 - ஆடி - 24 சத்தாபரணம்.
10.08.2026 -ஆடி 25- மஞ்சள் நீராட்டு விழா.
மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.