சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா

Swarnalakshmi
Aug 05, 2026,12:27 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026 ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி  புதன்கிழமையான  இன்று மாங்கனி நகர் சேலம் மாநகரில் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


சேலத்தில் குடிகொண்டு மக்களுக்கு நன்மைகள் வழங்கி வரும் எட்டு பேட்டை  அம்மன்களுக்கு ஆடி மாதம் வெகு சிறப்பாக விழாக்கள் நடைபெறுவது நீண்ட காலமாக இருந்து வரும் வழக்கம். கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


பக்தர்கள் கோவிலில் திரளாக வந்திருந்து பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவது வழக்கம். இதைத்தவிர கோவிலில் உருளு தண்டம்,அக்னி கரகம் மற்றும் அலகு  குத்தி   பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். வண்டி வேடிக்கைகள் திரளான பக்தர்களுடன் நடைபெறும். சேலம் மாநகரமே திருவிழா கோலம் பூண்டு கோலாகலமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.


இன்று ஒரு நாள் (05.08.2026)   உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இன்றைய முக்கிய  நிகழ்வுகள்:




பட்டத்து மகாராணி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன் கோவிலில், குகை மாரியம்மன் கோவில் மற்றும் அனைத்து மாரியம்மன் கோவில்களில்  பொங்கல் வைக்கும் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


 ஆடி பதினெட்டு 03.08.2026  திங்கட்கிழமை சக்தி அழைத்தல் நிகழ்வு திரளான பக்தர்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆடி 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 04.08.2026 அம்மனுக்கு சக்தி கரகம்  நடைபெற்றது.


 கோட்டை மாரியம்மன் திருவிழா நிகழ்வுகள் :

 

ஆடி 20, 21 -  05.08.2026 மற்றும்   06.08.2026 புதன், வியாழன் இரு நாட்களும் பொங்கல் வைத்தல், மாவிளக்கு  மற்றும் உருளுதண்டம் நடைபெறுகிறது.


வரவிற்கும் நிகழ்வுகள் :


07.08.2026 ஆடி 22 வெள்ளிக்கிழமை  காலை 9:15 மணிக்கு திரு தேரோட்டம்  நடைபெறவிருக்கிறது.


ஏற்பாடுகள்: 


லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் சிறந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


08.08.2026   - ஆடி 23 சனிக்கிழமை கம்பம் கங்கை சேருதல். 

09.08.2026    -  ஆடி 24 ஞாயிற்றுக்கிழமை சத்தாபரணம்.

10.08.2026  -  ஆடி 25 திங்கட்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவிருக்கிறது.


வழிபாடுகள்:


 அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் தினசரி நடைபெற்று வருகின்றன.


கோட்டை மாரியம்மன் அருளால் அனைவரும் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான  ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.