சமையல் With ஸ்வர்ணா.. கோதுமை தோசை & கொங்குநாட்டு நெல்லி தக்காளி தொக்கு!
- ஸ்வர்ணலட்சுமி
ஹாய் மக்களே.. எப்படி இருக்கீங்க. இன்னிக்கு நம்ம சமையல்ல, கோதுமை தோசையும், கொங்கு நாட்டு ஸ்டைலில் நெல்லி தக்காளி தொக்கும் செய்து பார்க்கப் போகிறோம்.
இது சட்டென்று 10 நிமிடத்தில் தயார் செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய,மிகவும் ஈசியாக செய்யக்கூடிய பேச்சுலர்ஸ் ரெசிபி. சப்பாத்திக்கு டஃப் கொடுக்கும் கோதுமை தோசை.
கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு -1 பெரிய கப்.
குறிப்பு: பேச்சுலர்ஸ் ஒருவருக்கு மட்டும் தயார் செய்ய 3 தோசைக்கு 3 குழி கரண்டி கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். அதிகமான தோசைகளுக்கு அதற்கேற்றார் போல் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும்.
2. அந்த மாவில் தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கலக்கி கொள்ளவும்.
3. உப்பு தேவைக்கு ஏற்ப. இதை ஒரு பவுலில் மூடி வைக்கவும்.
இப்போ வாங்க பாஸ் அதற்கு சைட் டிஷ் ஆக ஒரு டேஸ்டியான கொங்கு நாட்டு நெல்லி தக்காளி தொக்கு ஈசியாக செய்யலாமா?..
தேவையான பொருட்கள்:
1. தக்காளி ஐந்து கழுவி பொடியாக கட் செய்து வைக்கவும்.
2. சீரகம் -1/4 ஸ்பூன்.
3. பூண்டு ஆறு பல் பொடியாக கட் செய்யவும்.
4. வர மிளகாய் 2, காஷ்மீரி மிளகாய் 1. (தேவைக்கு ஏற்ப).
5. உப்பு தேவைக்கு.
6. பெரிய நெல்லிக்காய் 2 பொடியாக கட் செய்து கொள்ளவும்.
7. இஞ்சி சிறிய துண்டு.
8. கறிவேப்பிலை ஒரு கொத்து.
9. நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி.
10. பெருங்காயம் மஞ்சள் தூள் தலா 1/4 ஸ்பூன்.
செய்முறை:
பொடியாக கட் செய்த பெரிய நெல்லிக்காய், தக்காளி,சீரகம், பூண்டு பல்,இஞ்சி, கறிவேப்பிலை, வரமிளகாய் காஷ்மீரி மிளகாய்,உப்பு, மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸியில் அரைத்த விழுதை தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயில் நன்றாக வதக்கவும். தொக்கு நன்றாக எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து தொக்கை ஒரு பவுலில் மாற்றவும். அவ்வளவுதான் கொங்கு நாட்டு ஸ்பெஷல் நெல்லி தக்காளி தொக்கு ரெடி.
இப்போ தோசை கல்லை வைத்து கோதுமை தோசை மிதமான சூட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி வார்த்து எடுக்கவும். சப்பாத்தி போல உப்பி வரும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்தவுடன் சர்விங் பிலேட்டில் மாற்றி டேஸ்டியான கொங்கு நாட்டு தக்காளி தொக்கு உடன் சூடாக சாப்பிட நாக்கு சப்பு கொட்டும் அளவிற்கு அப்படி இருக்கும் போங்க பாஸ்...
வேலைக்குச் செல்லும் பேச்சிலர்ஸ் ஈஸியாக தயார் செய்யவும், சாப்பிடவும்இது ஒரு நல்ல ஃபில்லிங்கான உணவு. மதியம் தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான தொக்கு இது.
என்ன பாஸ் இன்னைக்கு டின்னருக்கு இதுதானே.. உங்களுடைய மைண்ட் வாய்ஸ் தெரிகிறதே...
ட்ரை பண்ணுங்க பாஸ்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான டேஸ்டியான சமையல் மற்றும் தோசை ரெசிப்பிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலக்ஷ்மி பாலசுப்ரமணி.