சிந்தையிலே என் தாயும் தினம் சிந்திக்கச் சொன்னதும் அன்பே...

Su.tha Arivalagan
Aug 08, 2026,11:59 AM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


அன்பென்ற சொல்லிலே அடங்குதம்மா இவ்வுலகம்....

அச்சாணியாய் இருக்கும் அன்பே வாழ்க்கைச் சக்கரம் ஓட்டுதம்மா...


உள்ளமதில் உள்ள அன்பால் பண்பு நிலைபெற்றதம்மா...

ஓடுகின்ற நதிநீரில் உள்ள அழுக்கு ஓடுவது போல் ...


வாடுகின்ற ஏழ்மை நிலைமை...

வள்ளல் அன்பால் மாறுதம்மா ...   


அன்பெனும் அமுத ஊற்று உலக ஜீவன் அனைத்திற்கும்....

இடையறாது கிடைத்துவிட்டால் இன்னல்கள் இங்கு ஏதம்மா?...




மழலையின் முன் மண்டியிடும் அன்பு ...

மத்தளமாய் மகிழ்வோடு தாளமிடும் அன்பு....


வெறுத்தவரையும் விரும்பிட வைத்திடுமே அன்பு...

இறுக்கமான மனநிலையை மாற்றி அமைத்திடுமே அன்பு ...


இரு கை நீட்டும் உயிர்முன் இந்தா என்றெடுத்தளிப்பதுவும் அன்பு  ...

சிந்தையிலே என் தாயும் தினம் சிந்திக்கச் சொன்னதும் அன்பே...


விந்தையாய் இருந்து வியக்க வைப்பதுவும் அன்பே ....

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)