இலவசம் ஏற்காதே!

Su.tha Arivalagan
Oct 31, 2026,11:52 AM IST

- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


கைநீட்டிப் பெறுகின்ற பொருளாலே....

பைநிறையும் என்று எண்ணாதே ...


நீ தாழுகின்ற பொழுதினிலே 

உன் தன்மானம் தலைகுனிகிறதே....


இலவசமாய் கிடைக்கும் யாவையுமே.... 

இன்பமென எண்ணுவது மடைமையன்றோ  ?


உழைக்காமல் கிடைக்கிறது என்ற உவப்பாலே....

நீ பெற்றால் அது நிலைக்குமா ?




ஒன்றுக்கொன்று இலவசம் கண்டதும்...

ஏற்படுகிறதே  நெஞ்சில் பரவசம் ....


மறைமுகமாகப் போகுதே பணம் அவன் வசம் ...

உணராமல் இருக்கிறாயே இதுவே நிசம் ...


வியாபார நோக்கில் 

விலையாகிப்  போவது நாம் தானே ....


அறம்சாரா எதுவுமே ஏற்பது அழகல்ல ...

இலவசம் ஏற்றல் பெறும் இகழ் வென்று உணர்ந்திடு !


தன் நிலை தாழாது உழைப்பில் வாராத இலவசத்தை ஏற்றிட மறுத்திடு


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)