எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஒரு வாடல்!

Su.tha Arivalagan
Oct 25, 2026,03:28 PM IST

- கவிஞர் செ சாந்தி சின்னத்தம்பி, மதுரை


கடந்த காலப்

பொக்கிஷம் ...

நினைவுகளை 

மீட்டெடுக்கும் 

நங்கூரம்...


மனமெங்கும் 

வாசம் வீசும்

மலர்வனம் ...


சில நேரம் சிறு துளி 

சிந்த வைக்கும்  

நீரூற்று ...




முதுமையின் 

விளிம்பிலும்

உதட்டோரம் 

தோன்ற வைக்கும் 

ஒரு புன்னகை...


எண்ணி எண்ணி

ஏங்க வைக்கும் 

ஒரு வாடல் ...


மறக்க இயலா

முகங்களையும் 


மரித்துப்போன 

முகங்களையும் 


தேடுகின்ற தேடல்


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)