பன்முகம் கொண்ட ஆண்களே!

Su.tha Arivalagan
Nov 19, 2026,03:50 PM IST

- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


பெற்றோர்க்கு,

அம்மா அப்பா என்று அன்போடு அழைத்த அன்பு மகனாய்....


அடுத்து பிறந்த மகவிற்கு அன்பு அண்ணனாய்...

  

துயரிலும் மகிழ்விலும் தோள் கொடுக்கும் அன்பு நண்பனாய்...


பெண்மையைப்

போற்றிக் கைதரும் ஆண்மையாய்.... 


நல்லிள மங்கைக்கு வாழ்க்கைத் துணையாய் ....




தான் பெற்ற மழலைக்கு நற்தந்தையாய் ...


சமூகத்தைத் திருத்தும் பணியில் சீர்திருத்தவாளனாய் ...


சீர்கேடுகளைக் கண்டால் சீறும் சிங்கமாய் ...


நல்லன போற்றிப் பிறர் நலத்தை நாடும் நற்பண்பாளனாய்....

 

குடும்ப பாரம் தாங்கும் சுமை தாங்கியாய்...


பன்முகம் கொண்ட ஆண்களுக்கு 

இனிய சர்வதேச ஆண்கள் தின நல்வாழ்த்துகள்


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)