பொறாமையாய் இருக்கிறது பெண்ணே!
- மதுரை செ. சாந்தி சின்னத்தம்பி
கன்னி நிலவே
மழையோடு காதலா....
என்னோடு காதலா ...
பொறாமையாய் இருக்கிறது
பெண்ணே ...
நான் தழுவ வேண்டிய உன்
மேனியை
மழைத்துளி தழுவுகிறதே....
என்னை விட விண்ணையும்
விழும் துளியையும் அதிகம்
நேசிக்கிறாயோ ....
உன் முகத்தில் பொங்குகின்ற
புன்னகை உணர்த்துகிறதே...
மேலிருந்து கீழ் நோக்கும்
உன் இரு விழிகள் எனையும்
தேடுவதை அறிகிறேன் ...
உளம் சிலிர்த்துப் பெருமிதமும்
அடைகிறேன் ....
காதல் கண்களில் நம்மிடையே
மின்னலென ....
உன்னின் அந்தப் பார்வை கண்டு தானே
உயிர்ப் பறவை பறக்கிறதே..
உனது ஒவ்வொரு மகிழ்விலும் நானும் இணைந்தேனே...
இது என்ன ஜென்ம பந்தமா ...
இணை பிரியாது தொடரும் சொந்தமா...
இரு ஆன்மாக்களின் புனிதராகமா...
காத்திருப்பேன் பெண்ணே யுகங்கள் கடந்தும் ...!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)