சிங்காரத்தேனே தென்மதுர மானே !

Su.tha Arivalagan
Jul 24, 2026,05:26 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி


ஆராரோ...

ஆரிரரோ....

ஆராரோ... ஆரிரரோ....


சிங்காரத்தேனே தென்மதுர மானே 

வந்தாடும் மீனே வாழ்வு தந்த கோனே


 முல்லைப் பூத்தொட்டில் உண்டு 

முத்துச்சரம் நீ உறங்க 




மல்லிப்பூ தொட்டில் உண்டு மன்மதனே நீ உறங்க 


அல்லிப் பூத்தொட்டில் உண்டு ஆரெழிலே நீ உறங்க 


அத்தனையும் மாமன் தந்த சீராக கண்ணுறங்க...


 யானை தந்தம் எடுத்து தேரு ஒன்னு செஞ்சு வெச்சேன்


புலியின் நெகமெடுத்து மாலை ஒன்னு கட்டி வச்சேன் 

 

தங்கராசா மருளாத 

வீரவாள் வாங்கி வச்சேன்....


கண்ணுறங்கு கண்ணுறங்கு காலம் வரும் கண்ணுறங்கு 


கதை கேட்டு முடிக்கையிலே வீரமும் சேர்ந்திருக்கும்....


சிங்காரத்தேனே

தென்மதுரமானே

வந்தாடும்மீனே

வாழ்வு தந்த கோனே...

ஆராரோ.... ஆரிரரோ...

ஆராரோ ஆரிரரோ


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)