Santhi Sinnathambi Poem: வனவளம் காப்போம்!
- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
அடர்ந்த மரங்களின் அழகிய சலசலப்பு...
அமைதியாய் ஓடுகின்ற ஆற்று நீரின் கலகலப்பு...
வீசுகின்ற குளிர் தென்றலின் மென்மை சிலுசிலுப்பு....
விளையாடும் விலங்குகளின் வினோத பரபரப்பு...
விந்தைகளைக் காட்டியே வியக்க வைக்கும் மேற்பரப்பு....
கூட்டையும் கலைக்கும் வேட்டையும் நடக்கும்...
கும்மாளம் போடும் புள்ளினமும் மயக்கும் ....
பல்வகை மலரும் மணம் தன்னைப் பரப்பும்
பெயரறியாக் கனிகளும் சுவைகள் கொடுக்கும் ...
பச்சை நிறப் போர்வையில் பல்லுயிர்ப் பெருக்கம் ....
இயற்கையின் படைப்பிலே இன்பமும் பிறக்கும்...
வன வளம் காத்தால் மழை வளம் பெருகும்...
புவியும் வெப்பமயமாதலைத் தடுக்கும்...
மழைவளம் பெற்றால் நில வளம் உயரும் ...
மரங்களின் தொகுப்பை அழிக்காது...
வனங்களின் வனப்பைப் பாதுகாப்போம்....
மனவளம் பெற்று வனவளம் மீட்போம்.
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)