காகத்தின் தேடல்
Aug 06, 2026,05:08 PM IST
- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
எப்போதுதான் இட்டிடுவாய்?
எனக்கான உணவை ...
ஏங்கித்தான் காத்திருக்கேன்....
இன்னமும் உன்னைக் காணலியே ...
எட்டு மணி ஆனா... ஓரெட்டு பார்க்க மாட்டாயா ?
காலையில வெயிலுந்தான் கண்ணையே சுட்டெரிக்குது....
நீ கூப்பிட்ட குரலுக்கு நான் ஓடோடி வருவேனே...
இன்று நான் கரைந்தும் நீயுந்தான் வராமல் இருப்பதென்ன?
பலகாரமோ பட்சணமோ...
சுண்டக்கடலையோ சுடுசோறோ....
சுட்டு வச்ச அப்பளமோ ....
எனக்குந்தான் பசிக்குது....
வெரசா வர மாட்டாயா? ...
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)