எது முன்னேற்றம்?

Su.tha Arivalagan
Oct 21, 2026,04:08 PM IST

- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


பெண்கல்வி, பெண்ணுரிமை பற்றி வாய்கிழியப் பேசும் மூடனே...

எது சமூக முன்னேற்றம் சிந்தித்ததுண்டா? 


பெண்ணைக் குறித்துப் பேசினால் மட்டும் போதுமா?

பெண்ணை உயர்த்த முன்னெழ வேண்டாமா?


மூடநம்பிக்கைகளை முடக்கிட வேண்டாமா?

அடிபட்டுக் கிடப்பவனின் அழுகை சத்தம் கேட்டும்


அலுங்காமல் புகைப்படம் எடுத்து ரீல்ஸ் போடும் அவலனே...

அடி மனதில் மனித நேயம் அழிந்து போனதா?




ஆக்கபூர்வ அறிவியலை, தொழில்நுட்பத்தை 

அழிவிற்குப் பயன்படுத்தி

அதில் வருமானம் பார்க்கும் அற்பனே..

இளம் தலைமுறை அழிகிறதே என்ற அச்சம் தோன்றவில்லையா?


தஞ்சம் என்று அடைபவரிடம் லஞ்சம் கேட்கும் லட்சியமற்றவனே....

மிஞ்சும் வாழ்வில் கொண்டு போவதென்ன ? 


என்று பெண் முன்னேற்றப்படுகிறாளோ...

என்று மூடநம்பிக்கைகள் முடிக்கப்படுகிறதோ...

என்று ஆக்கபூர்வ செயல்கள் நடைபெறுகிறதோ...

அன்றுதான் சமூகத்தின் முன்னேற்றம் அறிந்திடு!...


தனிமனித ஒழுக்கம் தனையே 

கடைப்பிடிக்கும் பொழுதிலே தான்

சுயமுன்னேற்றமும் உண்டென உணர்ந்திடு! 


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)