அந்தியின் அழகு!

Su.tha Arivalagan
Aug 19, 2026,06:33 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


வறுமையின் நிறமா நீ!

வனப்புமிகு வண்ணமா நீ!


வில்லேந்தும் வீரனின் விழியோட்டமா நீ!


கன்னிப் பாவையின் 

வெட்கச் 

சிவப்பா நீ !


என் கைகளில் வந்து சேர்ந்த 

எண்ணச்சிறகா நீ !


என்னுள் எழுந்த புரட்சிப் புதிரா நீ !




கண்ணில் நுழைந்த அந்திச்

செந்தூரமா  நீ!


நான் எடுத்த ஒளிப்படமே நாணிச் சிவந்தாயோ நீ !


ஒளிப்பிழம்பே! 


நான் எழுத நல்வழி காட்டவே 


நல்லொளி தந்தாயோ நீ !


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)