Mr.Prime Minister என்று சொல்லும் அளவிற்கு விஜய் இன்னும் வளரவில்லை: நடிகர் சரத்குமார்
சென்னை: மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் இன்னும் வளரவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்த இந்த கூட்டத்தில் விஜய் தோன்றியவுடன் தீம் சாங் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேம்ப் வாக் சென்று தனது உரையை துவக்கினார் விஜய். அப்போது விஜய் பேசுகையில்,
தங்களின் கொள்கை எதிரி பாஜக. அரசியல் எதிரி திமுக தான். நாம் பாஜகவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும். அவர்களுடன் கூட்டணி வைக்க நாம் என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா? ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் இடம் அடிபணிந்து கொண்டு, இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம் கூட்டணி இருக்காது என்று கூறியிருந்தார்.
இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு விஜய் இன்னும் அரசியலில் வளரவில்லை. எதை பேசுகிறோம், யாரைப்பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று கவனத்துடன் பேச வேண்டும். தவெக தலைவர் விஜய்க்கு பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா? என்று கூறியுள்ளார்.