Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

Su.tha Arivalagan
May 30, 2026,03:22 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


உறங்கும் அலைபேசி

கிறங்கும்  இமைகள்

நிலவு ஒளிர்கிறது


சீரான ஒழுங்கு

ஒத்தையடிப் பாதை

முன் முடிவுகள்  தவிர்



இலை நுனியில்

பாதரச சிறுகோளம் 

மழையின் மிச்சம்


கணினி  பணி

இரவு பகல் ஆகிறது

உறங்கா இமைகள் எரிகிறது 


ஊதி அணைந்த  தீபம்

பொசுங்கியது ஒரு உயிர்

பகலில்  இரவு  சூழ்ந்தது


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)