Coffee time: நல் விருந்து பின்.. நாவு தேடும்.. நற்பானம் காஃபி!
- சசிகலா விஸ்வநாதன்
காபி கிடைத்தால் எல்லோரும் என்ன செய்வோம்.. அழகாக குடித்து விட்டு கோப்பையை வைத்து விட்டுப் போய் விடுவோம் இல்லையா.. ஆனால் கவிஞர் எழுத்தாளர் சசிகலா விஸ்வநாதன் காபியை வைத்து என்ன செய்திருக்கிறார் பாருங்கள்.
மூவரி கவிதைகள்
காஃபி
நுரைத்துப் பொங்கும்
காஃபி கோப்பை
அது கவிதை
--
பொன்னிற டிகாஷன்
பொங்கும் பால்
நற்காலை பொழுது விடிந்தது
--
கொளுத்தும் வெயிலிலும்
நாவு தேடும் அமுதம்
வலுவான காஃபி
நல் விருந்து பின்
நாவு தேடும்
நற்பானம் காஃபி
--
கையில் காஃபி
தரும் வேளையில்தான்
காதல் மலர்கிறது சிலருக்கு
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)