Sasikala Viswanathan: காதல் பார்வை.. காமம் இல்லை.. நிலவு சிரிக்கிறது.. துளிப் பாக்கள்!
May 28, 2026,05:18 PM IST
- சசிகலா விஸ்வநாதன்
தனிமை துயர்
கண்ணீர் விடுகிறது
ஒற்றைமலர்
தட்டான் சிறகு விரிக்கிறது
மின்னும் மஞ்சள் தங்கம்
மாலை வெயில் மனோகரம்
காதல் பார்வை
காமம் இல்லை
நிலவு சிரிக்கிறது
காற்றின் குறும்பு
சங்கேத மொழி
தாளிப்பின் மணம்
தளிகை தயார்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)