Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!

Su.tha Arivalagan
Jul 08, 2026,12:03 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


மிஞ்சியது எல்லாம் எஞ்சியவையா?

இல்லை! இல்லை!


மிஞ்சியது சில; 

தஞ்சம்  புகும்   மண்ணில்;

எச்சம் போல்.


சில பஞ்சு போல்

காற்றில் மிதந்து

மஞ்சில் கரைந்து விடும்;

மிச்சம் இல்லாமல்.




பின்னும்

எஞ்சியவையே,

உன்னைப் பற்றி 

பேசும் மேன்மை


நீ யார்?  என்று; 

உலகுக்குச் சொல்லும்.


உன்னை அடையாளம் காட்டும்;

உன்னதம்‌.

அது உன்னையும் 

விஞ்சி நிற்கும்.


ஆதலின்

உன்னை விஞ்சி நில்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)