தனிமையின் கனிமை
- சசிகலா விஸ்வநாதன்
தனிமையைத் துய்ப்பவன்,
இனிமையையும் துய்ப்பான்.
தனிமையை இயல்பாய்
கொள்ளும் அவன்;
முனிதல் ஏதுமின்றி
தனித்திருப்பான்; அவன்.
தனியே இயங்கும் அவன்;
தனித்துவம் பெற்று உயர்வான்.
அகம் மலர;
தனிமையில் கனியும்
இனிமையில் சுகித்திருப்பான்;
ஆரவாரமற்ற அமைதியில்!
தனிமை..
அது பெரும் தனிச் சுவை என்றே
பசித்திருந்தவர் போல்
தனிமையை சலிப்பின்றி ருசிப்பார்.
மனம் கசிந்தே இருப்பார்..
தனித்தே..
இனித்தே...
இனியும்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)