மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
- சசிகலா விஸ்வநாதன்
எந்நாளும் அன்னை சொல் கேள்;
துணையாள் சொல்படி நட.
நாளும் தடை பல வந்திடினும்;
தார வழியே தேர்.
மனவி மணம் கோணாது இருக்க;
மணவாழ்க்கை மணம் பெறும்.
சிறியதில் நலமாய் விட்டுக் கொடுக்க;
பெரியதில் வெற்றி காண்.
அயலார் முன் நங்கையை ஏற்றிவைக்க;
வாய்க்கும் வீட்டில் நிம்மதி.
அரசு வேலை அமைந்தவள் வாய்க்க;
புதுமனை புகுதல் எளிது
தன் தாயிடத்தில் கருத்து உள்ளவன்;
தன் நங்கைக்கும் நல்லவனாவான்
மனைவியிடத்தில் குரல் உயர்த்தி பேசாதவனுக்கே;
இனிமையான வாழ்வு அமையும்
அடுப்படியில் மனைவிக்கு ஆற்றும் உதவி;
அவளுடன் சேர்ந்து உணவருந்த, தீருமே;
அன்றைய மனவாட்டம் அப்போதே!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)