விடை தேடும் விடையோன்!

Su.tha Arivalagan
Nov 24, 2026,11:04 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


என் முன் நிற்கும் மனிதா!

உற்றார் என்றும்,

சுற்றார் என்றும்,

மனை என்றும்,

மக்களென்றும்,

நேச வலையில்  அகப்பட்டு,

பாச சுழலில் சிக்கி; அறிந்து சில பிழையும்

அறியாமல் சில பிழையும் 

செய்தே;

தரணியில் வெற்றி வாகை சூடினாய்!




நீ வேண்டுவதெல்லாம் நடந்தது!

நான் நடத்தவில்லை!

நான் சாட்சியாக மட்டும் இருந்தேன்!


'நீயே துணை' என்று  நம்பி;

 வேண்டுதல் பலவும்  செய்தாய்!


என்று  உன் வேண்டுதலில் இருந்து எனக்கு

விடுதலை அளிப்பாய்?

இன்றும் வேண்டுதல் பட்டியலோடு நிற்கிறாய்!

என்று தான் 

என்னை அடைய மட்டும்

விடாய் கொண்டு 

என்னிடம் வருவாய்?


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)