சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!
- சசிகலா விஸ்வநாதன்
அழிந்த கோலம்
முன் வாசல் குப்பை
காலியாகிறது வீடு
சன்னல் ஓரம்
காகம் நிற்க
கவிழ்ந்த கிண்ணம்
நீர் குழாய்
சொட்டும் துளி
அமர்த்துவார் இல்லை
பூட்டின கதவு
படுத்து உறங்கும்
பழகின பூனை
நாள் காட்டி இல்லை
ஆணிகள் மட்டும்
வெற்று சுவர்கள்
சிறிதாய் இருந்தது
பெரிதாகி விட்டது
வீடு காலி
கொடி கம்பிகள் இடையே
சிலந்தி வலை
துணி உலர்த்துவார் எவருமில்லை
அடிக்கடி வாங்க
சொன்னது உதடுகள்
கை வாங்கியது சாவியை
பிள்ளைகள் சத்தம்
எதிரொலிக்கும் சுவர்கள்
காலி வீடு
அங்கை செம்பருத்தி சிவப்பு
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)