Short Story: உலகம்மை

Su.tha Arivalagan
Jul 04, 2026,04:01 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


"ஐயனே! என்னை அனைவரும்  கேலி பேசுகின்றனர். உங்ளுக்கு ஏர்வையான மனைவியாக நான் அமைந்து இல்லையா ? உங்கள் குழந்தைக்கு தாயாகும் தகுதி எனக்கு இல்லையா? உங்களையும் பித்துக்குளி என்று ஏகடம் பேசுகிறார்கள். எனக்கு மிகவும் மனம் கிலேசமாய் உள்ளது."


சாரதா எப்படியோ பகவானிடம் தன் உள்ளக் கிடக்கையை சொல்லிவிட்டாள். அப்போதுதான்  பரவச சமாதி கலைந்து, ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்த பரமஹம்சர் , தேம்பித் தேம்பி சிறு குழந்தை  போல் அழுது கொண்டிருக்கும், சாரதாவை நோக்கி கருணையுடன் ,'' அம்பிகையே ! விசாரம் வேண்டாம். உலகம் முழுவதிலிருந்தும் அநேக குழந்தைகள் உன்னை "அம்மா" என்று அழைக்கப் போகிறார்கள். அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு நீ  ஓடி வருவாய்தானே!", என்று இதமான ஒரு மறுமொழியை அளித்தார்.




புன்னகையுடன்.சாரதாமணி தேவியாருக்கு,சரிவர புரியவில்லை, எனினும், தன்னிடம் குருதேவர் இனிமையுடன் பேசினதிலேயே மகிழ்சியுற்றவள், தனக்கு அவர் அனுக்ரஹித்து விட்டார், என்ற புரிதலுடன், அவரை வணங்கி, சமையலறைக்கு விரைந்தாள்.


காலம் செல்லச் செல்ல சாரதா தேவி அவரை முற்றிலுமாக புரிந்து கொள்ள; இல்லறம் ; ஒரு பெரிய தவமும் நல்லறமுமாயிற்று. பகவானின் கூற்றுப்படி,நரேன் "அம்மா" என்றழைக்க வையகம் முழுவதும் அவரை அம்மா என்றே அழைக்க ஆரம்பித்தது.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)