அக்னி நட்சத்திரம்.. சுட்டெரிக்கும் வெயில்.. சுள் வெப்பத்திலிருந்து நம்மை காப்பது எப்படி?
- ஸ்வர்ணலட்சுமி
அக்னி நட்சத்திரத்திலே நீர் கூட கொதிக்குமாம் என்பது பழமொழி. இது மே நான்காம் தேதி முதல் தொடங்கியுள்ள அக்னி நட்சத்திரத்திலிருந்து நாம் எதிர் கொள்ளக்கூடிய கடுமையான வெப்பத்தை குறிக்கிறது. இந்த காலம் கத்திரி வெயில் என்றும் கத்துக்காட்டா காலம் என்றும் வெயில் கண் ணி என்றும் அழைக்கப்படும் வெப்பமான காலப்பகுதி.
மே நான்காம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டில் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளது. இது பொதுவாக சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரங்களில் கடந்து செல்வதை குறிக்கிறது. இந்த கத்திரி வெயில் காலத்தில் சூரியனின் தாக்கம் அதிகம். வெப்பச்சூடு மிக கடுமையாகவும் இருக்கும். முடிவு: மே 28 , 2025 புதன்கிழமை வரை அக்னி நட்சத்திரம் உள்ளது.
வெப்பநிலை: வெப்பநிலை சாதாரண நாட்களில் கொளுத்தும் வெயிலை விட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். காற்றும் வறட்சியாக வீசும். நிலம் மிகவும் காய்ந்திருக்கும். இதனால் வறண்ட நிலை பரவி, பசுமை குறைந்து காணப்படும்.
விவசாய நடவடிக்கைகள் தவிர்க்கப்படும் . நாம் இந்த கத்திரி வெயில் அக்னி நட்சத்திரத்தில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
* அதிகம் நா வறட்சி இருக்கும் .தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எனவே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் .ஆனால் ஃப்ரிட்ஜ் வாட்டர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். குறிப்பாக குழந்தைகள் ஐஸ் வாட்டர் விரும்பிகள், ஆனால் அதை கொடுப்பதை தவிர்க்கவும் .அதற்கு பதிலாக மண் பானையில் தண்ணீர் ஊற்றி அதை கொடுத்து பழக்கவும்.
* அதிகமான மோர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் .அதில் பெரிய நெல்லிக்காய் சேர்த்து மல்லித்தழை, வெள்ளரிக்காய், கறிவேப்பிலை சேர்த்து அருந்துவது நல்லது.
* தோல் சுருக்கம், டி ஹைட்ரேஷன் (நீரிழப்பு) வெப்ப கடுப்பு போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
வெயிலில் செல்வதை தவிர்க்கவும் .அப்படி செல்ல நேர்வர்கள் வேலைக்கு செல்பவர்கள் தலையில் தொப்பி அணிந்து செல்லவும். குடை எடுத்துக் கொண்டு செல்லவும் .இப்படித்தான் நம்மை பாதுகாக்க வேண்டும்.
* பழங்கள், காய்கறிகள் ,பழ ஜூஸ் குடிப்பது நல்லது. இளநீர் ,தர்பூசணி அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். சமையலில் தண்ணீர் காய்கள் எனப்படும் சுரைக்காய் ,பீர்க்கங்காய் தோசைக்காய், வெண்பூசணி பயன்படுத்தவும். முட்டைகோஸ் ,முள்ளங்கி சேர்த்துக் கொள்ளவும் கேரட் ,பீட்ரூட் ஜூஸ் குடிக்கவும்.
* குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்று அப்படியே விட்டு விடாமல் அடிக்கடி அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவும். பழ ஜூஸ் கொடுக்கவும் .பாட்டிலில் வரும் ஜூஸ்களை கொடுப்பதை தவிர்க்கவும்.
* எலக்ட்ரால் (Electral)போன்றவை கையில் வைத்துக் கொள்வது நல்லது. மிகவும் சோர்வாக இருக்கும் பட்சத்தில் தண்ணீர் கலந்து பருகவும். சுற்றுலா செல்வது குளிர் பிரதேசங்களுக்கு, மலைப்பிரதேசங்கள் போன்ற ஊர்களுக்கு செல்வது குடும்பத்துடன் இந்த வெயில் காலத்தை நல்ல முறையில் கடத்தலாம் .'ஏழைகளின் ஊட்டி 'எனப்படும் 'ஏற்காடு' சென்று வரலாம். "மலைகளின் இளவரசி" ஊட்டி ,கொடைக்கானல் இது போன்ற பல இடங்களுக்கும் சென்று வரலாம். இந்த கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து அக்னி நட்சத்திர நாட்களை இவ்வாறு கடத்துவது நன்மை, அதுவும் அவரவர் நிதிநிலைமைக்கும், வசதி வாய்ப்புக்கும் ,குடும்ப சூழ்நிலைக்கும் ஏற்ப செல்வது நன்று.
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.