10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Meenakshi
May 13, 2025,04:57 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வருகிற 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


2024-25ம் ஆண்டிற்கான 10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது.  இவர்களுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 1ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9,13,036 மாணவர்கள் எழுதியிருந்தனர். அதே போல 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை நடைபெற்றது. இவர்களுக்கான கோடை விடுமுறை மார்ச் 28ம் தேதி முதல் தொடங்கியது. இந்த தேர்வை 8,23,21 பேர் எழுதியிருந்தனர். 


 பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வருகிற 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தேர்விற்கு கொடுத்த மொபைல் எண்ணிற்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.