செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ
Feb 02, 2026,05:53 PM IST
மதுரை: செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு, வேறு யாரும் ஏற்றுக்கொள்ளததால் தவெகவில் சேர்ந்துள்ளார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது செங்கோட்டையன் எங்களுடன் தானே இருந்தார். தூத்துக்குடி சம்பவத்தின் போது செங்கோட்டையன் மாங்கா பறிக்கச் சென்றாரா?, செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு. வேறு யாரும் ஏற்றுக்கொள்ளததால் தவெகவில் சேர்ந்துள்ளார். அவருடைய பேச்சை நீங்கள் தான் பெரிதா எடுத்துக் கொள்கிறீர்கள்.
இன்னும் ஒரு சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீறக திட்டம் முழுமையாக மக்களுக்கு வந்து சேரும். முதல்வர் திறந்து வைத்த பிறகும் திட்டம். திட்டம் பயனில்லாமல் உள்ளது. பாஜக, அதிமுக ஆதரவு பெருகிக்கொண்டே இருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. திமுக அரசைவிட பன்மடங்கு சிறந்த நிர்வாகி எடப்பாடி பழனிசாமி. கருத்துக்கணிப்பை பார்க்கும்போது முதல்வருக்கு பயம் வந்துவிட்டது.