நிழலில்லாத நாள் - அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள்!

Meenakshi
Aug 25, 2025,05:05 PM IST

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  பள்ளி மாணவர்கள்  நிழலில்லாத நாள் குறித்து பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்ப்பது எப்படி என்கிற அறிவியல் விவரங்களை பள்ளி மாணவர்களுக்கு   தெளிவாக எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.




நிழலில்லாத நாள் குறித்து தங்களை சுற்றியுள்ள பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும், உறவினர்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை எவ்வாறு என்பது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள். நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி  ஆகியோர்  மாணவர்களை உற்சாகப்படுத்தி அறிவியல் உண்மைகளை விளக்கினார்கள்.




இப்பள்ளி மாணவர்கள் நந்தனா, ரித்திகா   ஆகியோர்   பள்ளி மாணவர்களிடம்  இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் இம் மாதம்  ஆகஸ்ட்  27 ம் தேதி தேவகோட்டை பகுதியில் மதியம் 12 மணி 15 நிமிடங்களில் நிகழும். .பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும்.சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்கு சமமாக மாறும் போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும் . அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும்.  இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் அன்று  நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது என்று செயல்முறை செய்து காண்பித்து விளக்கி கூறினார்கள். 


தமிழ்நாடு அறிவியல் இயக்க வலைதல பதிவுகள் , தகவல்கள் தங்களுக்கு நல்ல உதவியாக இருந்ததாக கூறினார்கள்.