முதியோரைக் காப்போம்

Su.tha Arivalagan
Jul 09, 2026,02:32 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி


நடைதளர்ந்து உடல் மெலிந்து 

கண்ணொளி குறைந்து நடுக்கம் உணர்ந்து ...

நான்கு சுவருக்குள்ளே நலிந்து கிடந்து ... 

ஊமை உணர்வுகளை உள்ளே புதைத்து  .. 

உருக்குலைந்து கிடக்கும் உயிர்களைக் காப்போம் !


ஓடி ஆடி உழைத்த உடம்பும உள்ளமும் ஓய்வைத் தேடி சற்றே ஓய்ந்து...

நாடி நரம்புகள் சுருண்டு இங்கே...

நற்பேச்சும் குறைந்து பாயில் சரிந்து ...

நடைப் பிணமாய் வாழும் நலிந்தோரைக் காப்போம் !




நம் இளமையில் நம்மைத் தாங்கி...

நமக்காக வறுமையிலும் பல முறை ஏங்கி...

ஊன் உருக உழைத்துத் தேடி...

ஈட்டிய பொருளை இந்தா என்றெடுத்தளித்த...

தன்னிலை அறியாத் தவசிகளைப்  

பெரும் விருட்சமாய் வாழ்ந்த முதியோரைக் காப்போம் !


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)