Tamil Poem: மறைந்த காதல்
- செ. சாந்தி சின்னத்தம்பி
தாவணிக்
கனவுகளில்
தவழ்ந்திருந்த காதல் ..
சாதி மதம்
காணாது
சாலை வீதிகளில்
சங்கமித்த காதல்...
சரித்திரத்தில் இடம்பெறவே பரிணமித்த
காதல் ...
அன்றிலாய்
வாழவே
ஆசைப்பட்ட காதல்...
குடும்பத்தின்
கௌரவத்தில்
குலைந்து போன காதல் ...
நெஞ்சம்
தொட்டவனின்
உயிரைக்
காத்திடவே
மறைந்து போன
காதல்...
உருவங்கள்
மறைந்தாலும்
மறந்தாலும்...
உயிர் உள்ளவரை
வாழும்
இந்தக் காதல்...
ஆம்....
உள்ளத்தின்
ஆன்மாவில்
மறைந்த காதல் ...
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)