கிங் படப்பிடிப்பில் ஷாருக் கானுக்கு காயம்.. ஒரு மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கிங் படத்தின் ஷூட்டிங்கின்போது காயம் அடைந்துள்ளார். அவர் ஒரு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானாவும் இணைந்து நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. மும்பையில் நடந்த படப்பிடிப்பின்போது தான் ஷாருக் கானுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
தற்போது ஷாருக் கான் அமெரிக்கா சென்று சிகிச்சை பெறுகிறார். படத்தில் தீபிகா படுகோன், ராணி முகர்ஜி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சண்டைக் காட்சியின்போது ஷாருக் கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மும்பை கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஷாருக்கானின் காலில் கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், என்ன மாதிரியான காயம் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
ஷாருக் கானுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அடுத்த படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கும். அவர் குணமடைந்த பிறகு முழு பலத்துடன் வருவார் என்று படக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். பதான் படத்தை சித்தார்த் ஆனந்த்தான் இப்போது கிங் படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.