அவள் தான் எங்கள் ஆனந்தஜோதி...!

Su.tha Arivalagan
Dec 22, 2025,10:50 AM IST

- வ. சரசுவதி


ஆலமரம் போல் நண்பர்கள்

பரந்து விரிந்து பல பேர்


ஆனாலும் என் கேளன் இல்லாமல் 

தற்பொழுது நான்..


அவளோ  எனக்காகவே

நானோ அவளுக்காகவே 


பள்ளி நாட்களிலும் அவளுடன் 

கல்லூரி நாட்களிலும் அவளுடன் 


சில நாட்கள் இடைவெளியில்...




தேடிய ஏக்கம் தீரவே 

பேரூந்தில் சந்தித்த நாளோ  நினைவில்..


மறக்கமுடியுமா?


அருகருகே பணியில் அமர 

மாணவர்களுக்காகவே கலந்துரையாடல்கள் பல 


 நாட்கள் நகர நகர

திடுக்கிடும் தகவல் வர 


ஓடிப்போய் பார்க்க !


ஆனந்தமாய் சுற்றித்திரிந்த 


அவளோ மௌனமாய்..


பல நாட்கள் படுக்கையில் படுத்திருக்க

கலையுமா அவள் மௌனம் என காத்திருக்க


பொறுக்கலையோ அந்த ஆண்டவனுக்கு


ஆம்...


என் அருமையான கேளனோ .....


ஒரு டிசம்பர் திங்கள் கடைசி நாளில்

அமைதியாய் உறங்கிப்போனாள் 


நாடே புத்தாண்டு மகிழ்ச்சியில் இருக்க

நானும் என் மற்றொரு கேளனும் 


மௌனமாய் வழி அனுப்பி விட்டு....


நாங்கள் மட்டும் இன்னும் 

அவளின் நினைவுகளுடன்


நகர்ந்து கொண்டே...


அவளின்ஜோதியுடன் 

பேசிக்கொண்டுள்ளோம்


ஆம் !


அவள் தான்  எங்கள் ஆனந்தஜோதி...


(வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)