கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !

Su.tha Arivalagan
Aug 18, 2025,04:38 PM IST

சென்னை: சமீபத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார். இதில் ஸ்ருதியின் கேரக்டர் வெகுவாக பேசப்பட்டு வருகிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமா மட்டுமல்லாமல், ராமையா வஸ்தாவையா, சலார் போன்ற பெரிய பட்ஜெட் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். 


கூலி திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் ஸ்ருதி ஹாசனின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. 




கூலி படம் குறித்த ஒரு விமர்சனத்தில் கூறுகையில், ஸ்ருதி ஹாசன் கவலையான முகத்துடன், தன்னை சுற்றி நடப்பதை நம்ப தொடங்குகிறார். நாகார்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்தில் துடிப்பாக நடித்துள்ளார். சத்யராஜ் கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். உபேந்திரா தேவாவுக்கு விசுவாசமான வீரராக கைதட்டல்களை பெறுகிறார். கிளைமாக்ஸில் ஆமிர் கான் ஒரு திருப்பத்தை கொடுக்கிறார். ரஜினிகாந்த் தனது ஸ்டைலான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.


சமீபத்தில், ஸ்ருதி ஹாசன் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு சென்றபோது நடந்த ஒரு சம்பவம் வைரலானது. ஸ்ருதி ஹாசன் கூலி திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்னை வெற்றி திரையரங்கிற்கு சென்றார். அப்போது, பாதுகாப்பு காவலர் அவரை தடுத்து நிறுத்தினார். உடனே நடிகையின் நண்பர்கள் சிரித்து விட்டார்கள். ஸ்ருதி ஹாசனும் சிரித்து, "நான் தான் இந்த படத்தில் ஹீரோயின். தயவு செய்து என்னை உள்ளே விடுங்கள்" என்று கூறுகிறார். 


வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் அதை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த ராகேஷ், "என் ஆள் கடமையை கொஞ்சம் ஓவராகவே செய்துவிட்டார். இது ஒரு வேடிக்கையான தருணம். எங்களுடன் இருந்ததற்கு நன்றி @shrutihaasan mam... உங்களுக்கு ஷோ பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்!!!" என்று குறிப்பிட்டிருந்தார்.