மைசூர் அரண்மனையிலிருந்து.. வேலூர் கோட்டைக்கு ஷிப்ட் ஆகி வந்த பிசிபேளாபாத்!
- சியாமளா வெங்கட்ராமன்
பிசிபேளாபாத் என்பது சாம்பார் சாதம் ஆகும். மைசூர் அரண்மனையில்இருந்து வந்தது என்றும் வேலூர் அரண்மனை மூலம் வந்தது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இப்பொழுது பிஸிபேளாபாத் இல்லாத திருமணங்களே இல்லையென ஆகிவிட்டது.
அதற்கு தேவையான பொருட்களும் செய்முறை பற்றியும் எழுதியுள்ளேன். இதன் பேரைப் பார்த்து மறுள வேண்டாம். இது செய்வது மிக சுலபம் சத்து மிக்கதும் ருசி மிக்கதும்ஆனது. இதோ குக்கிங் டிப்ஸ்.
தேவையான பொருட்கள்
ஸ்டெப் 1
தனியா........... நாலு டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு....... நாலு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு.... ரெண்டு டேபிள் ஸ்பூன்
சீரகம்.,....., ஒரு டீஸ்பூன்
வெந்தயம்....... கால் டீஸ்பூன்
கொப்பரை....... நாலு டேபிள் ஸ்பூன்
லவங்கம் 3
பட்டை ஒரு துண்டு
கசகசா...... ஒரு டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் 10
மேலே கூறிய பொருட்களை சிவக்க வறுக்க வேண்டும். ஆரிய பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மைய அரைக்க வேண்டும்.
ஸ்டெப் 2
பச்சரிசி ஒரு கப்
துவரம் பருப்பு முக்கால் கப்
அரிசி பருப்பு இரண்டையும் நான்கு கப் தண்ணீர் விட்டு குக்கரி நான்கு விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.
ஸ்டெப் 3
சின்ன வெங்காயம்20 பீன்ஸ் 10 கேரட் இரண்டு பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி இரண்டு உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கி அவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். அவை வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பொடி செய்து வைத்துள்ள பொடியை கலக்க வேண்டும். நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் பொழுது அரிசி பருப்பு கலவையை நன்றாக மசித்து இதில் கொட்ட வேண்டும். காய்கறிகளையும் அரிசி பருப்பு கலவையையும் நன்றாக கிளற வேண்டும்.
தள தளவெவென்று கொதித்து கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். உப்பு தேவை என்றால்போடவும்.இப்பொழுது இரண்டு ஸ்பூன் நெய்யில் பத்து முந்திரி வறுத்து போடவும். இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு நான்கு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை இவற்றை வெடிக்க விட்டு பிஸிபேளாபாத்தில் கொட்டவும்.
இப்பொழுது குழைவான கம கம வென்ற பிஸிபேளாபாத் ரெடி இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட் வடாம் அல்லதுசிப்ஸ் சைட் டிஷ் ஆக உபயோகப்படுத்தலாம்.
(ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரான சியாமளா வெங்கட்ராமன், நெய்வேலி என்.எல்.சி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் மற்றும் சமையல் குறிப்புகளை எழுதிவரும் இவர், எழுதிய 'யாதுமாகி நின்றாள்' சிறுகதைக்காக 'தமிழ்த்தாய்' விருதைப் பெற்றுள்ளார். மேலும், சென்னை ராமபுரத்தில் ஸ்ரீ விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பைத் தொடங்கி அதன் தலைவியாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி சமூகத் தொண்டு செய்து வருகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்)