Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

Su.tha Arivalagan
Jun 22, 2026,06:53 PM IST

- அ.சீ.லாவண்யா


சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக 1091 என்ற பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்த எண்ணானது அவசர காலங்களில் காவல்துறை உதவியை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், எளிதாகவும் விரைவாகவும் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த எண்ணை பெண்கள் தங்களுக்கு எற்படும் இன்னல்கள் மற்றும் பாதுகாப்மின்மை எற்படும் சூழலில் இந்த எண்ணை அணுகலாம். இந்த எண் அனைத்து பெண்கள் மற்றும் குழந்தை பெண்பிள்ளைகளுக்கு மனதில் பதிய வைத்துக் கொண்டால், எந்த பிரச்சினை என்றாலும் உடனடியாக சிங்கப் பெண் அதிரடிப்படை அவர்கள் உதவிக்கு வந்து சேரும். 24 மணி நேரமும் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.




பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் உள்ளிட்ட தொந்தரவுகள், வன்முறைகள், மிரட்டல்கள்  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க முடியும். பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் காவல்துறை விரைந்து செயல்பட்டு தேவையான உதவிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாமதமின்றி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என்றும், பொதுமக்கள் இந்த சேவையை விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பெண்களின் பாதுகாப்பு என்பது குடும்பத்தின் மட்டுமல்ல, சமுதாயத்தின் பொறுப்பும் என்பதை மீண்டும் நினைவூட்டும் வகையில், 1091 உதவி எண் பாதுகாப்பிற்கான நம்பிக்கையின் புதிய அடையாளமாக  உருவெடுத்துள்ளது. மக்களின் மனதில் பெண்களை பாத்துக்கக்க வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழ வேண்டும். இனிதாவது பெண்களுக்கு ஏற்படும் குற்றங்கள் குறையட்டும் பெண்கள் சுதந்திரமாக தைரியத்துடன் வாழட்டும் என்ற நோக்கில் அரசு இந்த படையை உருவாக்கியுள்ளது.


மனிதி 

அமைதி கொள்ளாதே 

பயப்படாதே தைரியமாக வாழ் 

உன் குரல் ஓங்க வேண்டும் 

சமுதாயத்தில் உனக்கு எற்படும் குற்றங்கள் குறைந்து சுதந்திரமாக வாழ்!