சிந்தனைச் சிதறல்.. மதிக்காத ஓராயிரம் உறவுகளை விட .. உயிராய் மதிக்கும் ஒரு உறவு போதும்!
Jul 15, 2026,02:31 PM IST
- அ.தாமஸ்
நமது உறவுக்கும் உணர்வுக்கும் மதிப்புக் கொடுக்காத ஓராயிரம் உறவுகளை விட நம்மை உயிராய் மதிக்கும் ஒரு உறவு உயர்வானது.
கடந்து வந்த பாதையில் உடன் நடந்து வந்தவர்களை எல்லாம் நினைவில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக அந்தப் பாதை நமக்கு கற்பித்த பாடங்கள் மட்டுமே அடுத்த நிலை பயணத்திற்கு போதுமானது.
நம்மை மதிக்காத இடத்தில் பெருஞ்சோறு உண்பதை விட நம்மை மதிக்கும் இடத்தில் பழஞ்சோறு உண்பது மேல்.ஆம் உணவை விட உறவும் உறவை விட உணர்வும் உயர்வானது.
நாம் வேண்டும் என்பவர்களை மட்டுமே உறவாய் நினைப்போம். நாம் வேண்டாம் என்பவர்களை உறவு என்று நிலையிலிருந்து அறவே அறுப்போம் இல்லையேல் நினைவிலிருந்து முற்றாய் மறப்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)