சூழ்நிலை!

Su.tha Arivalagan
Apr 07, 2026,04:49 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


சிரித்து விட்டு கடக்க வாழ்க்கை ஒன்றும் 

விளையாட்டு அல்ல... 


சிந்தித்து விட்டு  செயலாற்றினால்  

துன்பம் உனக்கு இல்லை... 


பேசவேண்டிய இடத்தில்  பேசாமல் இருந்தால் 

பலனில்லை.... 


தேவையில்லாத இடத்தில் பேசினால் 

மரியாதை இல்லை...




நாமே வலிய சென்று யோசனை  கூறினால்  

ஏற்பதில்லை.... 


நாடி வந்து யோசனை கேட்டால் வழங்குவதில்

குற்றம் இல்லை.... 


சிறுபிள்ளையின் தவறு அனுபவமின்மை... 

அனுபவ சாலிகளின் தவறு  கவனமின்மை..... 


பொறுமைக்கு எல்லை உண்டு

என்பர்... 


இருந்தாலும் இறுதி வரை பொறுமை காப்பது 

நன்மை தரும்.... 


சூழ்நிலைகள் பல வந்தாலும்

நேர்மறை சிந்தனை கொண்டால்

வெற்றி கொள்ளலாம் ...


மனித மனங்களை மட்டுமல்ல 

இந்த உலகையே.... 


சூழ்நிலைகள் மாறலாம் ..


மனநிலையும் மாறலாம்.... 


என்றும் மாறாதது மாற்றம் ஒன்றே.... 


சூழ்நிலைகளே  நம் வாழ்க்கை சூழலை அமைக்கும்... 


சூழ்நிலைகளை  திறப்படகையாள்வோம்.... 


வாழ்வில் சிகரம்

தொடுவோம்.... 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)