உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!

Su.tha Arivalagan
Sep 03, 2026,10:25 AM IST

 - சிவ.ஆ.மலர்விழி ராஜா, சீர்காழி


மூடிய இமைக்குள் 

விழியாக 

மடிந்தே போகாமல்


முன்னேறு உன்பாதையிலே 

துணிந்தே விரைவாக


உனக்கென வசந்தம் உன்மனமே 

எல்லாம் உன்வசமே....!


பிதற்றும் மனிதனின் வார்த்தை எல்லாம் 

பின்னால் சென்றிடுமே....!


வீழும் மனிதனின் பின் சிரிக்கும் பித்தர் கூட்டம்

நிறைந்திருக்க


வாழ்ந்தே போற்றும் வாழ்வுதனை 

மகிழ்ந்தே நிமிர்ந்திடுவோம்......!




இரவும் பகலும் இமைகளுக்குள் 

ஒன்றென ஆகாமல் 


விழியை திறந்தே வெளியில் வந்து

உலகை வென்றிடுவோம்.....!