Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
சென்னை: பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வரும் டூட் படத்தில் அவருக்கு ஒரு லீடிங் ஹீரோ கேமியோ ரோல் செய்வதுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
கோமாளி படம் மூலம் பட்டையைக் கிளப்பும் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்த படமான லவ் டுடே படத்தில் ஹீரோவாகி விட்டார். அது மிகப் பெரிய ஹிட்டாக மாறவே, தொடர்ந்து இப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த டிராகன் படமும் சூப்பர் ஹிட் படமானது. இதனால் அவரது கிராக்கியும் உயர்ந்துள்ளது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டூட் என இரு படங்களில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் டூட் படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்து வருகிறார். இப்படமும் காமெடி கலந்துதான் உருவாகிக் கொண்டிருக்கிறதாம். இப்படத்தில்தான் ஒரு முக்கிய நடிகரை கேமியோ செய்ய வைத்துள்ளனர்.
அந்த முக்கிய நடிகர் வேறு யாருமல்ல நம்ம சிவகார்த்திகேயன்தான். இருவரும் பைக்கில் போவது போல ஒரு வீடியோ வெளியாகி இவர்களது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்னும் படக் குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் செய்தி வருமாம்.