கருவறைப் பூக்கள்

Su.tha Arivalagan
Oct 16, 2026,01:19 PM IST

- சிவசத்தியா, காரைக்குடி


சிவனருளாலே அவன்தாழ் வணங்கி அவன் அருளாலே கண(ன) மே நிலைத்திட்ட கருவறைப் பூவே யான்


இறையருள் கருவறையில் அருள் நிறை மலராய் திங்கள்பத்து மோனமிருந்து


இருள் நிழலில் இளைப்பாற ஒளிந்திருக்கும் உயிர் நட்சத்திரம் நான்


சாதி மன மாறுகையில்லா சாத்திரங்கள் பலக்கற்று சித்தம் சிவமாய் கருவறையே


தவமாய் ஞானமும் மோனமும் உயர்ச்சி 

இகழ்ச்சியிலா துலாக்கூடம் துயரமற்ற


அன்பின் அருள்கூடம் இருளெனக்கு அருள்அகலாயமைந்த பேரொளி




நிறைவே மன அருட்பிரசாதம் நிலையாமையை நிலையாய்


உணர்த்திட்ட உட்கோயில் மண்வளம் பயிர் வளர்ச்சி மனவளம் கருவரைப்


பயிற்சி நறுமுகை மலர்கள் பூக்கும் தாயின் இயற்கை ஈகை அருட்கொடை 


நந்தவன கருவறையில் பூத்த மலர்கள் நாம் பல வாயினும் அடல் வேண்டும் 


ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் பொன்மானுக்கு பக்தனாகும் நிலை


வேண்டிடும் கருவறை பூக்களே வேண்டேல் வேண்டேல் இயற்கையை


அழித்தொழிக்கும் இகபரசுகம் தீண்டாமை இக்கட்டு மனித வாழ்வு


இக்கணமேயன்றி எக்கணமும் துன்பமிலா நிலைக்கு காலமெல்லாம்


வாழ்ந்திட குற்றமற்ற இன்பப் பொருளோனே குற்றமில்லா கருவறை பூவாய் காப்பிடு!