காலங்கள் கடந்த ஞானம் காற்றில் அறுந்த பட்டம் போல்!

Su.tha Arivalagan
Nov 27, 2026,03:03 PM IST
- சிவசத்தியா, காரைக்குடி

கடலில் மிதக்கும் கட்டுமரம்
கரை காண்பது எப்போது?
காலமெல்லாம் மிதந்தாலும்
கானல் நீரோ என் வாழ்க்கை 
களங்கமில்லா வளம் சேர்க்க 
விடியல் தான் எப்போது? 
காத்திருக்கும் காலங்கள் எவ்வளவோ 
கடவுளே நீ அறிவாய்!

காலங்கள் கடந்த ஞானம் 
காற்றில் அறுந்த பட்டம் போல்... 
காலத்தே பயிர் செய்தல் ஞா(ல)ன த்தின் சிறப்பே! 
கிளைகள் இழந்து வேர்மரம் துளிர்ப்பது 
நம்பிக்கையின் பி(ம) டியில் 
நடந்தது கடந்ததாகட்டும் 
ப(ம) றந்திடு எழுந்திரு 
வாழ்க்கை உ(ந)மதே என 
பூமி எங்கும் உன் தாய்மடியே 
தாங்கிடும் உம்மை சேயாக... 





தொடர்வண்டி ஓட்டமாய் தொலைகிறது 
நாளும் எனது வாழ்வு 
பயணம் கலைவது எப்போது? 
 வாழ்வு நிறைவது எக்காலமோ? 

உலகில் பிறந்த முதல் பாடல் ஓசை
தாயின் இதயத்துடிப்பும்
குழந்தை பிறந்ததும் எழுப்பும்
முதல் அழுகை
ஓசையும்
உன்னதமே!