காத்திருந்து பார்த்திருந்து கருவிழியும் பூத்திருந்து!
Nov 03, 2026,11:53 AM IST
- சிவசத்தியா, காரைக்குடி
மேகத்தை தூது விட்டு
தேகத்தை தொலைத்தவளே
நீர்வேட்கைத் தனித்திட
கரமலரேந்தி கமலமுகம் நின்றவளே
கருணையுள்ளம்
பாரலையே
முழம் நீர் ஊறலையே
காத்திருந்து பார்த்திருந்து
கருவிழியும் பூத்திருந்து
ஊதியமும் சரிந்ததடி
உப்புக்கும் வழியேதடி
வரப்பிருந்தும் பயிரிலையே
வயலிருந்தும் வழியில்லையே
ஒன்ன நம்பி நானிருக்கேன்
என்ன நம்பியிருக்குதடி
நா பெற்ற நாலு (பு) பிள்ள!