கோலங்கள்!

Su.tha Arivalagan
Nov 28, 2026,11:57 AM IST

- சிவசத்தியா, காரைக்குடி


புள்ளிகள் அழகாகும்

கோடுகள்

தடம்மாறும்


வடிவம்

புத்துணர்வு

புதுப்பொலிவால்

புதுமை படைப்பில்

வித்திடும்


ஓரறிவில்

தொடங்கி

ஆறறிவு உயிர்கள்

ஓவியமாய்

காவியம்

மலரும்




வண்ணங்களில்

எண்ணம் மிளிரும்


காண்பவர் விழி அகல 

அகவை அளவின்றி மகிழ்வர்

ரசிகர்கள் போக்கிலே..... 


இதிலொரு வாழ்க்கை தத்துவம் 

ஒளிக்கப்பட்டுள்ள தென்பது

பலருமறியா உண்மையே!


புள்ளிகளும் கோடுகளும் கோலங்கள் மட்டுமல்ல

புள்ளிகள் உறவாய்

கோடுகள்  உறவையிணைக்கும் கயிறாய்


ஒற்றுமை உணர்வுடன்  விழிப்புடன் வரைந்திட  

முழுவடிவம் பெறுவது அழகான கோலம் மட்டுமல்ல


இறைதத்துவத்தை  உணர்த்தி மாந்தனின்

அன்பான 

வாழ்க்கையும்

மதியால்  ஒளிர்ந்திட 

விட்டுக் கொடுத்தல்

மதித்தலெனும்

மதிகொண்டு

வாழ்ந்திட

மாக்கோலம் 

சிற்றுயிருக்கு 


உணவாய் 

பேருயிர்க்கு 

உணர்வாய் 

கூறிய அறிவு கணக்கீட்டாளான்

கணினீயாம்

விழிப்புணர்வு 

மாக்கோலம்!