ஓரெழுத்து ஒருமொழி (பா எண் ஒன்று)
- கவிஞர் சிவசத்தியா, காரைக்குடி
ஆ - வுக்கு நல்வுணவு
கோ - வனுக்கு சே - யே
நோ - யது நொ - வந்திடவே
மை - யது தீட்டிய பை - யாக
மூ - வது இன்றி நீ - யதுவென
கா - வது நா - வது வா - வென அழைத்திடும்
வீ - யதுவாய் மணம் பரப்பி
சா - வதை ஏ - வது வீழ்த்தி
கூ வதனில் சே - வாம்
நொ - யது நீங்கிட ஆ - பால் அமுது து - உண்டிட
நோ - யதுவுற்று
நொ - யது தீருமே
உடல்நலம் ஆளுமே!
இதனை பா வாக்கிப்
பகிர்கின்றேன்
பசுவுக்கு நல் உணவு புல்
இறைவனுக்கு உயர்வு மாந்தர்கள் அருந்திட நோய்யிடர் வந்திடாதே
அஞ்சனம் தீட்டிய முகனை வடிவாய் இளமை
மூப்பின்றியுனைச் சுட்டிடும்
எழில் வதனம் முன்னிலை காத்து
நாவும் அழைத்திடும் மலராய் மணம் பரப்பிடும்
மரணத்தை அம்பால் வீழ்த்தி புவியதனில் வாழ்ந்திட
ஏணியாய் உயர்த்தும் நோய்யது நீங்கி உடல் வெப்பம் தணித்திட
நாட்டுப் பசும்பால் அருந்திட உடல் நலம் வறுமையின்றி நோவு தீருமே
தம்கடமையாற்றிட
உடல் நலம் ஆளுமே!