ஆண்மையின் தீரனே!

Su.tha Arivalagan
Nov 12, 2026,11:48 AM IST

- சிவசத்தியா, காரைக்குடி


பாலகன்

விடலை

அறியாமை

இருளகற்றி

உபத்தியாயர்

அகஒளி

உணர்த்தும்

தீரனே


துன்பமது

களை (ரை) ந்து

இன்பமது

பெருகிட

சார்லிசாப்ளின்

மனமகிழ்த்திடும்

சிரிப்பு

தீரனே




முப்புரம்

எரித்த

ரத

நேமியை

பொடி 

செய்த

முக்கண்

தீரனே


யாதாகிலும் 

எதுவாகிலும்

இதுவன்றோ

தீரம்


தன்னுணர்வதக்கி

இன்னலுற்று

உயிர்

மண்ணை


தவசு 

மக்களை

இன்ப

இல்லாளை


இல்லினை

பெற்றோரை

உற்றோரை

நீங்கி


கடமையே

வாழ்வென

நினைவில்

உருகும்


மனதை

மதியில்

இ(நி)றுத்தி

நித்தமும்


போராடும்

அந்நியத்

தேசத்து

இளைஞ(ர்கள்) ரின்


வாழ்க்கை

ஆண்மையின்

உன்னத

தீரமே!