பிறைநிலவு!
Nov 04, 2026,01:47 PM IST
- சிவசத்தியா, காரைக்குடி
ஊர்த்துவன்
சூடிமகிழ் மதியே
வான்முற்றத்து
விண்ணொளியே
விண்மீன் சூட்டிய
வெண்புறாவே
காதலர் சீண்டும்
கலாபமயிலே
பாவலன் புலம்பும்
கலைநிதியே
வெய்யோன் குளிர்ந்திடும்
புனற் குடையே
வட்டத்தின் நடு
வரைக் கோடே
திங்கள் பானு
சந்திரன் அம்புலியாய்
ஆதியந்தச் சோதியாய்
வளர் நுதலி
உயிர்ப்பான உயர்ப்
பெண்ணழகே.